35.5 C
Chennai
Tuesday, June 15, 2021

மைக்கேல் ஹசிக்கு கொரோனா உறுதி..!


8
/ 100


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து   வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீசி பயிற்சியாளர் பாலாஜிக்கு மற்றும்  வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

Related news