ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்.!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய கவுரவ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்