சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

  • தர்பார் படத்தில் இடம் பெற்ற சர்ச்சை வசனம் நீக்கம்.
  • பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் விளக்கம். 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தில் சசிகலாவை விமர்சிக்கும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தில் இடம் பெற்ற, ‘பணம் கொடுத்தால் ஷாப்பிங் செல்லலாம்’ என சசிக்கலவை விமர்சிப்பது போன்று இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,  சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அல்லது யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ எழுதப்பட்டது அல்ல என்று லைகா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.