4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் – யுஜிசி

4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு.

இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்.டி படிப்பைத் தொடரலாம் என்றும் மூன்று ஆண்டு படித்தவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்குவதா அல்லது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பை வழங்குவதா என்பதை பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 4 ஆண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை 3 ஆண்டு இளங்கலை படிப்புகள் நிறுத்தப்படாது. இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இளங்கலைப் படிப்புகளுக்கான புதிய கடன் மற்றும் பாடத்திட்டக் கட்டமைப்பில் ஹானர்ஸ் பட்டப்படிப்புகள் நான்கு ஆண்டு திட்டங்கள் என குறிப்பிடப்படுகின்றன.

எனவே, நான்கு வருட இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக Ph.D ஐப் படிக்கலாம், மேலும் அவர்களுக்கு முதுகலைப் பட்டம் தேவையில்லை. PhD திட்டத்தில் சேர முதுகலைப் பட்டம் செய்ய வேண்டியதில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வெளியிட்டிருந்தது. அதில், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த படிப்பில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிட்டு மீண்டும் சேர்ந்து படிக்க முடியும்.

அதாவது, ஓராண்டில் வெளியேறுபவர்களுக்கு சான்றிதழ், 2-ம் ஆண்டுக்கு பட்டயச் சான்று, 3-ம் ஆண்டுக்கு இளநிலை பட்டச்சான்று, 4-ம் ஆண்டு வரை படித்து முடிப்பவர்களுக்கு இளநிலை பட்டத்துடன், ஹானர்ஸ் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அதிகபட்சம், சேர்ந்ததில் இருந்து 7 ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment