மாணவர்களே…நாளை முதல் இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (ஜூன் 22-ம் தேதி) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதன்படி,www.tngasa.org என்ற இணையதள முகவரியில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 22-ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here