#InternationalDayOfYoga:மைசூரு அரண்மனையில் யோகா செய்த பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.அந்தவகையில்,இன்று 8-வது சர்வதேச யோகா தினம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ‘மனித நேயம்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில்,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகா செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்,கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே,யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:”கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரக்கூடிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரது வாழக்கைக்கு யோகா பெரும் அச்சாணியாக இருந்து வருகிறது.இந்த முழு பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்து தொடங்குகிறது.அதன்படி,ஒவ்வொரு தனிநபர்களும் ஒவ்வொரு பிரபஞ்சம்.மேலும்,யோகா நமக்குள் இருக்கும் அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது மற்றும் விழிப்புணர்வு உணர்வையும் உருவாக்குகிறது.

மேலும்,உள் அமைதியுடன் மில்லியன் கணக்கான மக்கள் உலகளாவிய அமைதியின் சூழலை உருவாக்குவார்கள்.அதனால்தான் யோகாவனாது மக்களையும் நாடுகளையும் இணைக்கிறது.மேலும் யோகா நம் அனைவருக்கும் ஒரு பிரச்சனை தீர்வாக மாறும்”,என்று கூறினார்.

அதே சமயம்,தமிழகத்தில் சென்னை உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்தந்த மாநில ஆளுநர்கள்,மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Comment