புயல் முன்னெச்சரிக்கை – தலைமைச் செயலாளர் ஆலோசனை!

மாண்டஸ் புயல் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், காவல், தீயணைப்பு, வானிலை ஆய்வு மைய இயக்குநர், முப்படை அதிகாரிகள், வருவாய், வேளாண், பள்ளி உள்பட பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனையில், புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அவசர உதவி மற்றும் புகார் தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என்று அறிவித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment