காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் – தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு.!

கொரோனா எதிரொலியால், தலைமை செயலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்றும்  ஊழியர்கள் கைகளை 20 விநாடிகள் சோப்பால் கழுவவும், வெந்நீர் பருகவும் என அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த கூட்டங்களை அவசியம் ஏற்படாவிடில் நடத்தக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பொதுஇடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்