சிலைக்கடத்தல் புகார்…! டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமீன் …!

சிலைக்கடத்தல் புகாரில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என இன்று விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

Image result for tvs venu srinivasan HIGH COURT TRICHY

இந்நிலையில்  டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது என்று  வேணு சீனிவாசன் தெரிவித்தார்.

Image result for TRICHY TEMPLE

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி  வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரிய நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது.6 வாரத்திற்கு டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்யக்கூடாது என்று  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

தற்போது  சிலைக்கடத்தல் புகாரில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம். அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையாவுக்கும் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.அதேபோல்  அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment