தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் – வாழ்த்தும் பிரபலங்கள்!

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இன்றுடன் 35 வயது ஆகும் நிலையில் இவரது பிறந்த நாளுக்காக திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் ஆகிய கமலஹாசன் அவர்களின் மகள் தான் நடிகை ஸ்ருதிகாசன். இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். போற்றி பாடடி பெண்ணே எனும் பாடல் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வந்தார்.

தற்பொழுது முன்னணி நடிகையாக விளங்கும் ஸ்ருதி எப்பொழுதும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், 1986எ ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்கான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Rebekal