நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகினோம் – யாஷிகா ஆனந்த்

நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்.

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர், மூக்குத்தி அம்மன், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மகத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜியும், யாஷிகாவும் காதலிப்பதாக இணையப்பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து யாஷிகா ஆனந்த் கூறுகையில், நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.