பிருத்விராஜூக்கு ஜோடியாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா.!

நடிகை ஸ்ரீதிவ்யா அடுத்ததாக நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக ‘ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா .இவர் கடைசியாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் நடித்ததை தொடர்ந்து மூன்று வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.அதன் பின் தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் படத்திலும், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த இவர் தற்போது மலையாளத்திலும் பிரபல நடிகருக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார் .டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் ‘ஜனகணமன’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் புரோமோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.