உலகக்கோப்பையில் 12 வருடங்களாக இங்கிலாந்து அணியிடம் வெற்றி பெற்று வரும் இலங்கை !

நேற்று நடந்த 27-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதியது.இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 232 ரன்களை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 212 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் கடந்த 2007-ம் உலகக்கோப்பையில் இருந்து நேற்றைய போட்டி வரை 4 முறை மோதி உள்ளது. மோதிய 4 போட்டிகளிலும் தொடர்ந்து 4 முறையும் இலங்கை அணி வெற்றி பெற்று உள்ளது.இதன் மூலம் உலகக்கோப்பையில் 12 வருங்களாக இங்கிலாந்து அணியிடம் இருந்து இலங்கை  வெற்றி பெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2007WC – SL Defeated Eng
2011WC – SL Defeated Eng
2015WC – SL Defeated Eng
2019WC – SL Defeated Eng*
 

author avatar
murugan