#IPL2022: ஹைதராபாத் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – ஆரன் பின்ச் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் தடுமாறிய பின்ச் அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சுனில் நரேன் களமிறங்கினார்.

நடராஜன் வீசிய முதல் பந்தில் சுனில் நரேன் சிக்ஸர் அடித்து அசத்த, அடுத்த வீசிய யாக்கரில் அவர் வெளியேறினார். இதன்மூலம் பவர்-பிளே ஓவரில் கொல்கத்தா அணி 3 விக்கெட்களை இழந்து தடுமாற தொடங்கியது. அதனைதொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக ஆட, மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய ரசல், அதிரடியாக ஆடி 25 பந்துகளுக்கு 49 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.