CWC19 : முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.இன்று தொடங்கி  ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி கேப்டன் டூப்ளஸ்சி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: ஜோன்ஸ் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லெர் , பென் ஸ்டோக்ஸ், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷிட், லியாம் பிளங்குட், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம் பெற்றனர்.

தென் ஆப்ரிக்கா வீரர்கள் விவரம்: ஹாசிம் அம்லா, குவின்டன் டி காக் , ஐடென் மார்கிராம்,  டூ பிளெசிஸ் (கேப்டன்), ரேசி வான் டெர் டஸன், ஜீன்-பால் டுமினி, டுவைன் ப்ரோட்டோரியஸ், ஆண்டில் பெஹல்குவே, கிகிஸோ ரபாடா, லுங்கி நிக்கி, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.

 

Leave a Comment