ஆபாச பட நடிகை சோபியா லியோன் 26 வயதில் மரணம்..! வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

Sophia Leone Death: உலக அளவில் பிரபலமான ஆபாசப் பட நடிகை சோபியா லியோன் தனது 26வது உயிரிழந்தார், வீட்டில் இருந்து அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில், ஆபாச படங்களில் நடித்து வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.!

அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்த சோபியா லியோன் தனது வீட்டில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். இதனால், சோபியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read More – விமான பயணத்தின் போது நடுவானில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய்

அவருடைய வளர்ப்பு தந்தை மைக் ரோமியா இதனை உறுதி செய்ததுடன், சோபியா லியோன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். அவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1997-ம் ஆண்டு பிறந்த சோபியா லியோன் 18 வயதில் ஆபாச படவுலகில் அறிமுகம் ஆனார்.

Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!

அவருடைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.8.28 கோடி ஆகும். நடப்பு ஆண்டில் ஆபாச பட உலகில் நடித்து வந்த காக்னி லின் கார்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா பீல்ட்ஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

 

Leave a Comment