காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.!

Gaza: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் ஓய்ந்தபாடில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

READ MORE – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியவை சமீப நாட்களாக காசாவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில்,  விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

READ MORE – விமான பயணத்தின் போது நடுவானில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய்

அதன்படி, அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகித்து வருகிறது.   இந்த நிலையில், உணவுப் பொட்டலங்கள் அடங்கிய பெட்டியை கீழே போடும்போது பாராசூட் திறக்காமல், கீழே கூடியிருந்த மக்களின் மேல் விழுந்தது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்பட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

READ MORE – 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?

2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவின் கால் பகுதி பஞ்சத்தில் இருப்பதாகவும், குழந்தைகள் பட்டினியால் இறப்பதாகவும் ஐ.நா. மேற்கோள் காட்டியுள்ளது. இதனிடையே, காசாவில் 30,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஹமாஸ் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment