சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி சில நேரங்களில் மின்கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தாக முதல்வரின் காலை உணவு திட்டம் என்று கோவையில் தொடங்கப்பட்டது. வீட்டில் சாப்பிடுவதைப் போல் இருப்பதாக குழந்தைகள் சந்தோஷமாக தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை என்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான கட்டணம் தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் கட்டண விவரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் மின்கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment