Thursday, November 30, 2023
Homeஇந்தியாபிரதமர் மோடியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்.! ராஜஸ்தான் முதல்வர் பதிலடி.!

பிரதமர் மோடியை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்.! ராஜஸ்தான் முதல்வர் பதிலடி.!

கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு முதற்கட்ட தேர்தலும், மிசோராம் மாநிலத்தில் அனைத்து தொகுதி தேர்தலும் நடந்து முடிந்தன.

அதே போல அடுத்து நவம்பர் 17 , 23, 30 ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பில் இருந்து வருகிறார்.

CBI, ED, IT ஆகிய அமைப்புகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள்.! கார்கே கடும் குற்றசாட்டு.!

அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, உதய்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ” ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் அச்சமின்றி பேரணிகளை நடத்துகின்றன. பயங்கரவாத ஆதரவாளரான காங்கிரஸ் அரசை ராஜஸ்தான் மக்கள் அழிப்பார்கள்.

காங்கிரஸ் ராஜஸ்தானை அழிக்க அனுமதிப்போமா? ராஜஸ்தானின் பல பகுதிகளில் இருந்து. ஏழைகள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இங்கு காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால், இது மேலும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதில் கூறும் வகையில், உரையாற்றியுள்ளார் . அவர் கூறுகையில், “பிரதமரை யாரோ தவறாக வழிநடத்தி விட்டனர் அல்லது அவருக்கு சரியான செய்தியை கூறவில்லை. பொதுவெளியில் அவர் நேற்று உரையாற்றியது ஆட்சேபனைக்குரியது.

பாஜகவினர் கன்ஹையா லாலை கொலை செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரை 2 மணி நேரத்திற்குள் ராஜஸ்தான் மாநில காவல்த்துறையினர் பிடித்துவிட்டனர். தேசிய புலனாய்வு முக மையான NIA அப்போதே வழக்கை விசாரித்தது. மத்திய புலனாய்வு அமைப்பு தான் முன்வந்து இந்த வழக்கின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களை பிரதமர் மோடி மீண்டும் பேச வேண்டாம் என்று நான் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஒரு கொள்கையின் அடிப்படையில் தேர்தலில் போராடுகிறோம் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உரையாற்றினார்.