CBI, ED, IT ஆகிய அமைப்புகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள்.! கார்கே கடும் குற்றசாட்டு.!

இம்மாதம் (நவம்பர்) 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி மிசோராம் மாநில தேர்தல் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் 2ஆம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சார வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று சத்தீஸ்கர் மாநிலம் பைகுந்த்பூர் தொகுதியில், காங்கிரஸ் தலைவர் மல்லகர்ஜுன கார்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

டெல்லியில் விரைவில் செயற்கை மழை.! செயல்படுத்தும் முறை…

அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பிரதமர் மோடி மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) ஆகியவை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். அவற்றைத் தடுக்க, சத்தீஸ்கர் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். என பேசியிருந்தார்.

அடுத்து கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோரா சட்டமன்றத் தொகுதியில் நடந்த மற்றொரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கார்கே, பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களாக, அமலாக்கத்துறை (ED), CBI மற்றும் வருமானவரித்துறை (IT) ஆகிய அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் பிரதமர் எங்கு சென்றாலும் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்துகின்றன.

மோடிஜி, தான் பல விஷயங்களைச் செய்திருப்பதாகக் கூறுகிறார். நாட்டிற்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார். காங்கிரஸுக்கு பயந்து ஒவ்வொரு மேடையிலும் காங்கிரஸ் பெயரை 50 முறையாவது பிரதமர் உச்சரிக்கிறார்.

தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும், தலைவர்களைக் குறிவைக்கவும், பாஜக தலைமையிலான மத்திய அரசு ED, IT துறை மற்றும் சிபிஐயைப் பயன்படுத்தி வருகிறது.

தனது கட்சி இந்துக்களின் கட்சி என்று பிரதமர் மோடி கூறுகிறார. இதை அவர் வேண்டுமென்றே கூறுகிறார். நாங்கள் இந்துக்கள் இல்லையா.? என் பெயர் மல்லிகார்ஜுன் கார்கே. மல்லிகார்ஜுன் என்பது சிவபெருமானின் பெயர். நீங்கள்  ஏன் பொய் சொல்கிறீர்கள்.? என கேள்வி எழுப்பினார்.

இன்று நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர், அதே சமயம் ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால் பிரதமருக்கு அதை பற்றி கவலையில்லை. உங்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் வேலையை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. நாங்கள் உங்களுக்கு (சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு) உறுதியளித்த அனைத்து உத்தரவாதங்களையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று கூறினார் .

அடுத்து, பெண்களுக்கு அவர்களின் சித்தாந்தத்தில் உரிமைகள் இல்லை. மனு சாஸ்திரங்களின்படி, பெண்களும் தீண்டத்தகாதவர்களும் விலகித்தான் இருக்க வேண்டும். அவர்கள் கல்வி பெறக்கூடாது. இந்த சித்தாந்தத்தை தான் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சி என்றும் தனது பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.