இதுவரை 116.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி;3.39 கோடி பேர் குணமடைவு!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 313 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,10,413 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 180 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,10,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 313 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,65,662 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,329 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,39,22,037  ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.30% ஆக அதிகரிப்பு.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,22,714 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.532 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,16,50,55,210 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 67,25,970 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.