கரும்புள்ளி, முகப்பரு, வறட்சியா.? அப்போ தக்காளியை யூஸ் பண்ணுங்க.!

சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை வைத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், சருமத்திலும் சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது பற்றி தெரியுமா..?
ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பிசுபிசுப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்துளைகளில் அழுக்குகளால் ஏற்பட்ட அடைப்புக்களை நீக்கி, முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது.
கரும்புள்ளிகளை நீக்க:

இப்போ காலகாட்டத்தில் ஒரு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை எளிதில் நீக்க அதற்கு ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி  சர்க்கரை சேர்த்து அதனை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் அடுத்ததாக 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.

முகப்பருவை போக்க:

பலருக்கு முகத்தில் பருக்கள் அடிக்கடி தொல்லைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த பருக்களைப் போக்க தக்காளிக்கு முக்கிய பங்கு வகுக்கிறது. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு, பருக்களால் வந்த தழும்புகளையும் மறையச் செய்யகூடும். இதனை தொடந்து 7 நாட்கள் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

சரும வறட்சி:

உங்கள் முகம் அடிக்கடி வறட்சியாக காட்சி அளிக்கிறதா…? அந்த வறட்சியை போக்க ஒரு தக்காளியை அரைத்து கூல் செய்து பின் அதில் ஆனைக்கொய்யாவை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சரும கருமையும் நீங்கும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.