வளர்ப்பு நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு!

அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் போது தவறி விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பைடனுக்கு 78 வயதாகிறது. இந்நிலையில், ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு டைகர் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பைடன், டைகருடன் விளையாடும் போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த எலும்பு முறிவு தீவிரயமடைவதை  தடுக்க,அவர் பல வாரங்கள் பூட்ஸ்  அணிய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேசமயம், அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள தடையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், பைடன் குணமடைய ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.