எலும்புக்கூடாக மாணவி…தனிப்படை போலீசார் தீவிர விசாரணை…!!

12

திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த மாயமான மாணவி சரிதா_தான் என்பதை உறுதி செய்தனர்.  பின்னர் எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளிக்கு சென்ற மாணவி மாயம் தற்போது எலும்புக்கூடாக கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.