மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார் – அண்ணாமலை

ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட். 

இன்று ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட். மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன்! இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார்.

மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார். விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவரே.

40க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்று, பத்மபூஷன் ஆகி, பத்ம விபூஷன் ஆகி, இன்னும் பெறற்கரிய பலப்பல சர்வதேச விருதுகள் பெற்ற பாரதத்தின் ரத்தினமே. இந்திய இளைஞர்களுக்காக, 2011ல் ஊழலை ஒழிக்க “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தைத் தொடங்கினீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக வணங்குகிறேன். வாழ்த்துங்கள். வழிகாட்டுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment