தனி நீதிபதி உத்தரவு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை!

அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இதனால் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

விவசாயிகளுக்கான நிதியுதவியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்!

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்துசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அறிவித்துள்ளனர். இடைக்கால தடை காரணமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரியிருந்த நிலையில், நாளை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்