இதய வீக்கத்தை குறைக்க எளிய வழிமுறைகள் !

நமது உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு இதயம். இந்த இதயத்தை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் நமக்கு இதை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்தின் கொலஸ்ட்ரால் அதிகமாக  இருப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதில் இருந்து நம்மை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி :

இதய வீக்கத்தை சரி படுத்த நாம் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தினமும் நாம் உடற்பயிற்சி செய்வதால் இதயத்தில் உள்ள கொழுப்புகள் கரைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆழ்ந்த தூக்கம் :

இதயத்தில் உள்ள வீக்கத்தை குறைக்க நாம் தினமும் ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள  வேண்டும். இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க ஆழ்ந்த தூக்கம் ஆகும்.

புகை பிடித்தல் தவித்தல் : 

இதய ஆரோக்கியம் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புகைபிடித்தல் பழக்கமாகும். சிகிரெட்டில் நிக்கோட்டின் எனும் நச்சு பொருள் இதய ஆரோக்கியத்தை மிகவும் கெடுகிறது. எனவே நாம் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவது மிகவும் நல்லது.

மன அழுத்தம் :

இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் ஏற்படும் போது கார்டிசால் எனும் ஹார்மோனை இதயம் வெளியேற்றும். எனவே இதயம் ஆரோக்கியமாக வைப்பதற்கு மூச்சு பயிற்சி, தியானம், பாடல்கள் கேட்பது, புத்தகம் படிப்பது முதலியவற்றை கடை  பிடிப்பது மிகவும் நல்லது.