வெளியாகிய சில மணி நேரங்களிலே இணையத்தை கலக்கும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர்

வெளியாகிய சில மணி நேரங்களிலே இணையத்தை கலக்கும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் அவருடன் ஜோடியாக நிதி அகர்வால், நந்திதா, இணை நடிகர்களாக பாரதிராஜா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன் மற்றும் யோகி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கக்கூடிய புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்திற்கான படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்லை சுற்றி உள்ள காட்டுப் பகுதிகள் மற்றும் முக்கியமான சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை மாதவ் மீடியா சார்பில் தயாரித்து உள்ளனர். இந்நிலையில் இன்று 4:32 அளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியது. எமோஷன், காதல், ஆக்ஷன் காமெடி மற்றும் கிராமத்துப் பின்னணி என அட்டகாசமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவும் கையில் பாம்பு இருப்பதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் பல தடைகளையும் தாண்டி இந்த டீசர் வெளியாகி உள்ளது. வெளியாகி சில மணிநேரங்களிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வரவேற்பு பெற்றுள்ளது. இதொ அந்த டீசர்,

author avatar
Rebekal