சிம்பு பட விவகாரம்! கோர்ட்டில் ஆஜராக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு உத்தரவு!!

சிம்பு நடிப்பில் 2017இல் ஆதிக் ரவகசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படம் வெளியாகி பலத்த தோல்வியை தழுவியது. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.  இந்த படத்தின் தோல்விக்கு சிம்புதான் காரணம் எனவும், அவர் பட ஷூட்டிங்கிற்கு கறித்த நேரத்தில் வரவில்லை என பல புகார்கள் அவர் மீது அடுக்கப்பட்டது.

அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்டு எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் நடிப்பில் செக்கசிவந்த வானம் திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவதான் வருவேன் படமும் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. ஆனால் இந்த படத்திற்கு வெளியீட்டில் தடை ஏற்படுத்த தயாரிப்பாளர் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

சிம்பு தரப்பில் தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவிற்கு 8 கோடி சம்பளம் பேசி 1.5 கோடி மட்டுமே சம்பளமாக கொடுத்தார் எனவும், பல இடங்களில் சிம்புதான் படதோல்விக்கு காரணம் என கூறி வருவதால் நஷ்ட ஈடாக 1 கோடி வழங்க வேண்டும்..எனவும்,

மேலும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக வரவுள்ள வந்தா ராஜாவாதான் வயுவேன் பட வெளியீட்டின் போது சங்கதலைவர் விஷால் கட்டபஞ்சாயத்து செய்து சிக்கல் ஏற்படுத்துவார் என கூறப்பட்டது. இதனால் சங்க தலைவர் விஷால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment