இன்று கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்கிறார் சித்தராமையா…!

இன்று கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கிறார். 

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்றை எழுதியுள்ளது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் அமையவுள்ள அரசின் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

டுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை அழைத்து, மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.