29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

தோல்விகளில் இருந்து திசை திருப்பவே பாஜக அரசு இதனை செய்கிறது.! சித்தராமையா கடும் விமர்சனம்!

தோல்விகளில் இருந்து திசை திருப்பவே பாஜக அரசு 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து உள்ளது. என இன்று முதல்வராகும் சித்தராமையா விமர்சனம் செய்துள்ளார். 

மத்திய அரசு நேற்று மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது. செவ்வாய் கிழமை (மே 23) முதல் வங்கிகளில் அதனை திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திருப்பி செலுத்தும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து இன்று கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சித்தராமையா கூறுகையில், பிரதமர் மோடி அரசு மீண்டும் ரூபாய் நோட்டுக்கள் தடை விதித்துள்ளது . பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே ஒரு தெளிவு இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2,000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்கள்? பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சித்தராமையா.