கல்லூரி மாணவியாக களமிறங்கும் ஸ்ரீ பல்லவி!

நடிகை ஸ்ரீ பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாதா 87 என்ற படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகளில் முதன்முறையாக திருங்கங்கையாக நடித்து பாராட்டு பெற்றவர் இவர் தான்.

இந்நிலையில்,  இயக்குனர் சாம் இம்மானுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள, நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் கதாநாயகனாகவும், வில்லனாக வராகியும் நடிக்கவுள்ளனர்.

இதுகுறித்து சாம் இம்மானுவேல் அவர்கள் கூறுகையில், ‘ தனி மனித சுதந்திரமும், உரிமையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லும் இந்த படத்தில், நடிகை ஸ்ரீ பல்லவி கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.