முக கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலர்கள் மீது நாயை கடிக்க விட்ட கடைக்காரர் கைது!

முக கவசம் அணியாத கடைக்காரரிடம் அபராதம் கேட்டதற்காக காவலர்கள் மீது தனது நாயை அவிழ்த்து விட்ட கடை உரிமையாளர் கைது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவை எதிர்ப்பதற்காக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும், மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பதே முறையான வழி என்பது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாடு முழுவதிலும் அபராதமும் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவிலும் காவல்துறையினர் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாண் எனும் மாவட்டத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர் முக கவசம் அணியாமல் தனது இரண்டு ஊழியர்களுடன் இருந்துள்ளார். எனவே அங்கு வந்த காவலர்கள் முகக்கவசம் அணியாததற்காக அவரிடம் அபராதம் கேட்டுள்ளனர்.

அபராதம் கொடுப்பதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததுடன், தனது வளர்ப்பு நாய்கள் இரண்டையும் காவலர்கள் மீது அவிழ்த்து விட்டுள்ளார். அதில் ஒரு நாய் போலீஸ் அதிகாரியை கடித்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு கடை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
Rebekal