குஜராத்தில் பாஜகவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. மன்சுக் வாசவா கட்சியில் இருந்து விலகல்..!

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மக்களவை எம்.பி. மன்சுக் வாசவா தெரிவித்துள்ளார்.

நேற்று பருச்சில் இருந்து பாஜக எம்.பி மன்சுக்பாய் தஞ்சிபாய் வாசவா குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் கட்சிக்கும், கட்சியின் மத்திய தலைவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நான் என்னால் முடிந்தவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன்.

அதே நேரத்தில், கட்சி மற்றும் வாழ்க்கையின் கொள்கையைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் தேவை, ஆனால் இறுதியில் நான் ஒரு மனிதன், ஒரு மனிதன் தவறு செய்கிறான். அதனால் தான் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

பாஜக பருச் எம்.பி. மன்சுக் வாசவா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த ஊரான குஜராத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்சுவ வசாவா எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார்என்பது குறித்து அது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

author avatar
murugan