மீண்டும் அதிர்ச்சி – பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிப்பு.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடுத்துள்ள உருமாறிய கொரோனாவுக்கு IHUB.1.640.2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா நாடான கேமரூனில் இருந்து மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்களால் IHUB.1.640.2 என்று பெயர் சூட்டப்பட்ட உருமாறிய கொரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த புதிய வகை கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்