மூன்று மாதத்தில் சந்திரயான்-2 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன்  உறுதி…!!

இஸ்ரோவின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன்  இன்று தெரிவித்ததாவது ,   மத்திய அரசானது இஸ்ரோ பணிகளை மேம்படுத்த மத்திய அரசு  30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஒதுக்கீட்டு தொகையை வைத்து 23 திட்டங்களைச் செயல்படுத்த்தலாம்.  இரண்டாவது முறையாக சந்திரயான்-2 என்ற செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் ,  உலகிலேயே மிக குறைந்த அளவு பணத்தை செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் செயற்கைக்கோளில் மனிதனையும் வைத்து விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment