சுய பரிசோதனை செய்துகொள்ளும் நினைப்பில் பாஜக இல்லை! – ஜார்கண்ட் தேர்தல்! சிவசேனா விமர்சனம்!

  • ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
  • பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இது குறித்து சிவசேனா பத்திரிக்கை கட்டுரை எழுதியுள்ளது.

நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்து. தனித்து போட்டியிட்ட பாஜக 25 தொகுதிகளை வென்று தோல்வியடைந்தது. வரும் 29ஆம் தேதி ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜார்கண்டில் பாஜக தோல்வியடைந்தது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ‘ அரியானா தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெற்றிருந்தது. ஆனால் பாஜக தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது.

தேர்தல் மூலம் சுய பரிசோதனை செய்துகொள்ளும் நினைப்பில் பாஜக இல்லை. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்துக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஜார்கண்டில் அக்கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ‘ என கட்டுரை வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.