உலகக்கோப்பையில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஷாகிப் அல் ஹசன்!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன் படி இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் ,சௌமியா சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவருமே தடுமாறி விளையாடினர்.

இந்நிலையில் தமீம் இக்பால் 212 ரன்னில் வெளியேற பின்னர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினர். ஷாகிப் களமிறங்கிய பின் பங்களாதேஷ் அணியின் ரன்கள் உயர்ந்தது. இப்போட்டியில் ஷாகிப்  74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் .

இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஷாகிப் விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.இந்நிலையில் சச்சின் ஒரு 2003 -ம் ஆண்டு உலகக்கோப்பையில்  7 போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து இருந்தார். இன்னும் ஒரு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்தால் சச்சின் சாதனையை ஷாகிப் முறியடித்து விடுவார்.

author avatar
murugan