சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு.. ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் – முதலமைச்சர்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10%இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்தனர். 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 5 நீதிபதிகள் அமர்வில் ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ள கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்தார். தலைமை நீதிபதி யு யு லலித் பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகளில் 3 பேர் 10% இடஒதுக்கீடு வழங்கியது சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்தனர். பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்.

முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூக நீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முதல் வழக்கு திமுகவுடையது. 10% இட ஒதுக்கீட்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment