ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் – விசிக தலைவர்

தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என விசிக தலைவர் கோரிக்கை.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜக புறக்கணித்த நிலையில் மற்ற கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.

எஸ்சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் 20% உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். 10% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக பாஜக மாநில இல்லாத மாநில முதலமைச்சர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.

மேலும், பிபி மண்டல் பரிந்துரைக்கு எதிராக சங்பரிவார்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் பரிணாம வளர்ச்சியே இன்றைய EWS இட ஒதுக்கீடாகும். இது ஓபிசி மற்றும் சமூகநீதிக்கு எதிரானது என்பதை உணர்ந்து செயல்படுவதோடு மண்டலுக்கு சிலை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்கவும் நடைமுறைப்படுத்தவும் கூடாதெனவும், பாஜக அல்லாத அல்லாத பிற மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் சமூகநீதியைக் காப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment