மேற்குவங்கத்தில் ஜூன் 10 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு.!

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக 21 நாளுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 14ம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஏப்.30 வரை ஊரடங்கை நீடிக்க பிரதமரிடம், முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 5 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்