தலைநகர் டெல்லியில் பள்ளிகள் திறப்பு..! எப்போது தெரியுமா..?

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும்  பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைள் மேற்கொண்டதையடுத்து, கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், தலைநகர் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய அத்தனை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.