ஐபிஎல் 2024 : டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த சஞ்சு சாம்சன் ..!!

ஐபிஎல் 2024 : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 27-வது போட்டியாக இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது.

தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இன்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் காயம் காரணமாக விலகி இருப்பதால் இந்த போட்டியில் அந்த அணியின் சாம் கர்ரன் தலைமை ஏற்று அணியின் கேப்டனாக களமிறங்கி உள்ளார்.

இந்த போட்டி தற்போது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவா மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

விளையாடும் வீரர்கள்

பஞ்சாப் அணி வீரர்கள் 

ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.

ராஜஸ்தான் அணி வீரர்கள் :

சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் / கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியான், கேசவ் மகராஜ், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.