யுவனின் இசையில் உருவாகும் சண்டகோழி பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் அதே லிங்குசாமி-விஷால் கூட்டணி தொடர்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்நிலையில்   இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை விஷால் தயாரிக்கிறார் லைகா நிறுவனம் வெளியிட உள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment