வேதா இல்லம் விற்பனை என்பது வதந்தி – சசிகலாவுக்கும் இது பொருந்தும் – ஜெ.தீபா

வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியாக செய்திகள் பரவி வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் என்றும் ஜெ.தீபா ஆடியோ வெளியிட்டுள்ளார். 

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாவது வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் அவர் கூறுகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம். அவர் மறைந்த பின்பு அந்த இல்லம் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு சட்டப்  போராட்டங்களை தொடர்ந்து, தற்போது இந்த வீடு எங்கள் கையில் வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வதந்தியான செய்திகள் பரவி வருகிறது.

இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு உதவி செய்த பல பேர் தேவைப்பட்டனர். அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல சட்ட போராட்டங்களுக்குப் பின்பு வேதா நிலையம் தங்கள் கைவசம் வந்துள்ளதால் அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதோடு, கூடிய விரைவில் அந்த வேதா இல்லத்தில் குடியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment