சபரிமலை மலையேற்றத்தின் போது இருதய பிரச்சனை உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்!

தற்போது கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், மண்டல பூஜைகள் சபரிமலையில் தொடங்கிவிட்டதால்,சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன, நிலையில், இதுவரை மலையேற்றத்தின் போது 34 பேர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இதேபோல, கடந்த ஆண்டு 173 பேர் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 24பி பேர் இறந்துவிட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு, 281 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 36 பேர் உயிரிழந்தனர்.
இந்த வருடம் சபரிமலை சன்னிதானத்தில் 5 இருதய மருத்துவமனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். இருதய பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுவிடலாம். அங்கே சிகிச்சை முடிந்து, பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படுவார்கள்.
இதய பிரச்சனை உள்ளவர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை கண்டிப்பாக தங்களுடன் வைத்திருக்க வேண்டும், எனவும் அப்படி இருந்தால் முகாம்களில் உள்ள மருத்துவர்கள் விரைவாக சரியான சிகிச்சை அளிக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.