ரூ.1000 பொங்கல் பரிசு- இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இன்று முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். .கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.இதனுடன் பொங்கல் தொகுப்பாக1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.இந்த பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே. சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது.முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசு திட்டம் தொடங்கி வைத்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.