ஆர்எஸ்எஸ் பேரணி அமைதி பேரணி தான்… அதற்கு ஏன் தடை? – தமிழிசை

தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என ஆளுநர் தமிழிசை கேள்வி. 

வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது.

அனைவரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும்; ஆர்எஸ்எஸ் பேரணி அமைதி பேரணி தான். அதற்கு ஏன் தடை? தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment