கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு…! அரசாணை வெளியீடு…!

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.