போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? – உச்சநீதிமன்றம்

போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிகா அகர்வால் என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் உள்ளது. போராட்டத்தின் மூலமாகவும் நாடாளுமன்ற விவாதம் மூலமாகவும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். ஆனால் போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்றும், எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.